பரமக்குடி குமரசுப்ரமணிய சுவாமி கோயில் பூக்குழி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 03:04
பரமக்குடி; பரமக்குடி குமரசுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ் வருட பிறப்பையொட்டி 2ம் ஆண்டு பூக்குழி விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த குமர சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு தமிழ் வருடப்பிறப்பையொட்டி 2வது ஆண்டாக பால்குடம், இளநீர், பால்காவடி எடுத்து பூக்குழி இறங்கும் விழா நேற்று இரவு நடந்தது. முன்னதாக காவடிகள் தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் இருந்து மாலை 6:00 மணிக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு 8:00 மணிக்கு கோயில் முன்பு பூக்குழியில் இறங்கும் வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர், தேவஸ்தான டிஸ்டிகள் செய்திருந்தனர்.