விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் சிதம்பரம் நடராஜருக்கு குஞ்சிதபாதம் வழங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2025 03:04
திருப்பதி; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் தெய்வீக ஆசீர்வாதத்துடன், ஒரு பக்தர் வைரம் பதித்த தங்க குஞ்சித பாதத்தை மையத்தில் பதித்த மரகதக் கல்லுடன், ஸ்ரீ சிதம்பரம் நடராஜர் ஸ்வாமிக்கு வழங்கினார்.
சிதம்பரத்தில் இருந்து வந்த தீட்சிதர்கள் நடராஜப் பெருமானின் திருவருள் முன்னிலையில் அவருக்கு விஷேச ஆபரன சமர்ப்பணம் செய்தனர். இந்த நிகழ்வில், பூஜ்ய காஞ்சி மகாஸ்வாமிகளுக்கு நடராஜர் கோயில் மீதுள்ள சிறப்புப் பற்று, பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நடராஜருக்கு ரத்தினங்களால் ஆன குஞ்சிதபதம் பரிசளித்தது, நடராஜர் கோயிலில் உள்ள பாண்டிய நாயக்கர் கோயிலைப் புதுப்பித்தல் மற்றும் பல்வேறு வருகைகள் மற்றும் சமர்ப்பணங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர் விளக்கினார். நமது பண்டைய கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக காஞ்சி மடத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வித் திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். முன்னதாக பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை (16 ஏப்ரல் 2025) திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திற்கு வருகை தந்தார். அங்கு சிறப்பு பூஜைகள், சேவைகளில் கலந்து கொண்ட ஸ்வாமிகள் பின்னர் சங்கர மடத்திற்குச் சென்றார்.