பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் விமான பாலாலய யாகம் நடைபெற்றது.
பழநி மேற்கு ரத வீதியில், கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடைபெற தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற இன்று கோயில் விமான பாலாலயம் நடைபெற்றது. இதில் யாக பூஜைகள் நடைபெற்று பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம் நடைபெற்றது. வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கிரி வீதி கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உரிமையாளர் செல்வகுமார், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.