பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
04:04
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், 20ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நிறைவடைந்தது. விழாவை ஒட்டி பெருமாள், சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரம், முத்து பந்தல், முத்தங்கி அலங்காரம், அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அலங்காரம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, திருத்தேர், குதிரை வாகனம், பரிவேட்டை, சேஷ வாகனத்தில் வைகுண்ட நாதன் அலங்காரம், தெப்பத்தேர், பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி பத்து நாட்களும், திவ்ய பிரபந்த சேவா காலம் தினமும் மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் வளாகத்தில் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.