கோவை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 11:04
கோவை; லாலிரோடு தெலுங்குபாளையம் பால் சொசைட்டி பால் கம்பெனி எதிரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 65ம்ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 07ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த நிகழ்வாக பூச்சாற்றுதல், அக்னி கம்பம் நடுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.