குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகத்தில் அமர்ந்த நிலையில் மூலவர் பைரவர் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டுகளாக இக்கோயிலில் பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடக்கிறது. முன்னர், இந்திரன் மகன் ஜெயந்தன் முனிவரால் சாபம் பெற்றார். ஜெயந்தன் பைரவர் சன்னதியில் தவமிருந்து சுவாமி அருளால் பாவ விமோசனம் அடைந்தார். இதனையடுத்து நீண்ட காலமாக ‛ஜெயந்தன் பூஜை என்ற பெயரில் சித்திரை முதல்வெள்ளியில் மக்களால் பைரவருக்கு விழா எடுக்கப்படுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசலையில் அஷ்டபைரவர் யாகபூஜையை சிவாச்சார்யர்கள் நடத்தினர். தொடர்ந்து காலை 12:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலை கலசங்கள் புறப்பாடானது. பின்னர் மூலவர் சன்னதியில் வேத பாராயணங்கள், திருமுறைகள் முழங்க அபிேஷக, ஆராதனை நடந்தன. மூலவர் பைரவர் விபூதிக் காப்பில், வெள்ளி கவசத்தில் அருள்பாலிப்பார். இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. காலை முதல் பைரவர் சன்னதியில் பெண்கள் மாவிளக்கேற்றி பைரவருக்கு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.