இக்கோயிலில் மாணிக்க விநாயகர், மாணிக்க நாச்சியம்மனுக்கு காப்புக் கட்டி ஏப்.15 ல் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:30 மணிக்கு அம்பாள் கேடகத்தில் புறப்பாடும், இரவு 10:00 மணிக்கு சிம்மம்,அன்னம் வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. நேற்று காலை கேட்கத்திலும், இரவு காமதேனு வாகனத்திலும் அம்பாள் திருவீதி வலம் வந்தார். இன்று இரவில் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். ஏப்.22 காலையில் தேருக்கு அம்பாள் எழுந்தருளி தெற்குப்பட்டுக்கு வடம் பிடித்தல் நடைபெறும். ஏப்.23 ல் மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர். பின்னர் மாலையில் தேர் வடம் பிடித்து தேர் திரும்புதல் நடைபெறும். இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். ஏப்.24 காலையில் தீர்த்தவாரி,மஞ்சுவிரட்டும், இரவில் பூப்பல்லக்கில் அம்பாள் பவனியும் நடைபெறும்.