பதிவு செய்த நாள்
21
ஏப்
2025
06:04
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு கோயிலில் கடந்த 24 நாட்ககளில் செலுத்திய காணிக்கைகளை கோயில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் கணக்கிடும் பணியில் இன்று (21ம் தேதி) ஈடுபட்டனர். அதில் பணமாக ஒரு கோடியே எழுபத்து ஒரு லட்சத்து எழுபத்து ஏழு ஆயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி மூன்று ரூபாய், தங்கம் 165.கிராம், வெள்ளி1, கிலோ 350 கிராம் இருந்தது. பசு பாதுகாப்பு உண்டி மூலம் 13,814ரூபாய், நித்ய அன்னதானம் கோயில் உண்டியல் மூலம் 42,436 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கோயிலின் நிர்வாக அதிகாரி பெஞ்சலா கிஷோர் தெரிவித்தார். இந்த உண்டியல் பணம் கணக்கிடும் பணியில் கோயில் துணை செயல் அதிகாரிகள் ரவீந்திரபாபு, ஹரிமாதவ ரெட்டி, தனஞ்சய, பிரசாத், மற்றும் கோயில் அதிகாரி நாகேஸ்வரராவ், மேற்பார்வையாளர்கள்- கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, ஆய்வாளர் சுப்ரமணியம் நாயுடு, கோயில் பணியாளர்கள், ஊழியர்கள், யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.