பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
10:04
கிளார்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மஹா சுவாமிகள் வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி நடராஜ பெருமானுக்கும், சிவகாமி சுந்தரி அம்பாள், விநாயகர், அய்யப்பன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோருக்கு விபூதி, பஞ்சாமிர்தம், திருமஞ்சன பொடி, கரும்புசாறு, ஜவ்வாது உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து மலர் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.