பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
03:04
கூடலுார்; கூடலுார் எம்.ஜி.ஆர்., நகர் முனீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில் தேர்திருவிழா வண்ண ஒளி அலங்காரத்தில் சிறப்பாக நடந்தது கூடலுார் எம்.ஜி.ஆர்., நகர் அருள்மிகு முனீஸ்வரன் துர்க்கை அம்மன், கோவில் தேர் திருவிழா, 19ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தது. 10:30 மணிக்கு கோவிலில் இருந்து பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம், கோழிக்கோடு சாலை நர்த்தகி, செம்பாலா வழியாக, நந்தட்டி மாதேஸ்வரன் கோவில் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மாலை விளக்கு பூஜை நடந்தது. 20ம் தேதி, காலை முதல் சிறப்பு பூஜைகள், மாலை மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு முனீஸ்வரர் ஊர்வலம் துவங்கியது. கூடலுார்– - ஊட்டி சாலையில் உள்ள விநாயகர் கோவில், மைசூரு சாலை சக்தி முனீஸ்வரன் கோவில் வரை சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து வான வேடிக்கை மற்றும் மஞ்சள் நீராட்டு விழாயுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர்.