திருமலை திருப்பதியில் பாஷ்யகார திருவிழா வெகு விமரிசையாக துவங்கியது;
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 11:04
திருப்பதி; ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். ராமானுஜர் பிறந்த சித்திரை மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தை (திருவாதிரை) முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலையில் பாஷ்யகார உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாஷ்யகார உற்சவம் இன்று தொடங்கியது. இன்று ஏப்ரல் 23 முதல் மே 03 வரை கொண்டாடப்படுகிறது. விழாவில் தினமும் காலை, மாலை சின்ன மாட வீதி உற்சவமும், பெறிய மாட வீதி உற்சவம் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளான மே 02 அன்று சாத்துமோரை அனுசரிக்கப்படுகிறது. அன்று மாலை சகஸ்ரதீபலங்கார சேவைக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமியும், ராமானுஜரும் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கந்தப்பொடி உற்சவம் மே 03ம் தேதி நடைபெறும்.