பதிவு செய்த நாள்
24
ஏப்
2025
11:04
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி வாகனம் செய்யப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உபயதாரர் அளித்த, 1.15 கோடி ரூபாயில், 90.97 கிலோ வெள்ளியை பயன்படுத்தி, அதிகார நந்தி வாகனம் உருவாக்கப்பட்டது. அந்த வாகனத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலுக்கு நேற்று ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.