பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
01:04
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்தில் திருப்பணிக்காக தங்க தகடு ஒட்டும் பணி துவங்கியுள்ளது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வரலாற்று புராணச் சிறப்பு மிக்க அஷ்டாங்க விமானம் புகழ் பெற்றது. விமானத்திற்கு தங்கத் தகடு பதிக்கும் பணிக்காக 18 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது. தற்போது இந்த விமானத்தின் மூன்று நிலைகளில் முதல் நிலைக்கு முதற்கட்டமாக திருப்பணி நடந்து வருகிறது. அதற்கான செப்புக்கவசம் தயாரிக்கப்பட்டுஉள்ளது. தொடர்ந்து தங்கத்தகடு தயாரிக்கும் பணியும்நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று செப்புக் கவசத்தில்தங்கத் தகடு ஒட்டும் பணி செய்ய மதுராந்தாகி நாச்சியார் உத்தரவிட்டார். நேற்று காலை 7:15 மணிக்கு உற்ஸவர் அலங்காரத்தில் சிம்ம மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ரமேஷ் பட்டாச்சார்யார் உள்ளிட்ட பட்டாச்சார்யார்களால் சிறப்பு ேஹாமம் துவங்கியது. பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சமஸ்தான மேலாளர் இளங்கோ தகடை செப்புக்கவசத்தில் ஒட்டி துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் சரவண கணேசன், அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வி, நகை மதிப்பீட்டு வல்லுநர் செல்லப்பாண்டி, உபயதாரர் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனர் சொக்கலிங்கம், திருப்பணிக்குழுத் தலைவர் ராஜ்மோகன், எம்பெருமானார் சாரிடபிள் ட்ரஸ்ட் தலைவர் காந்தி, செயலாளர் ஸ்ரீராம்,பொருளாளர் கதிர்வேல், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பட்டமங்கலம், மயில்ராயன்கோட்டை நாட்டார்உள்ளிட்ட பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து அடுத்த இரு நிலைகளுக்கான தங்கம் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.