நத்தம் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2025 01:04
நத்தம்; நத்தம் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா ஏப். 22ல் சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் இருந்து கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு திருவிழா தொடங்கியது. இரவு அம்மன் குளத்தில் இருந்து கரகம் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வர அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி, கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இரவு கரகம் அம்மன்குளம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.