சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 10:04
கன்னியாகுமரி; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று திருக்கொடியேற்றுடன் தொடங்கியது
கன்னியாகுமரி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா இன்று (28ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார். விழாவில் 9 ம் நாள் திருவிழாவான, மே மாதம் 6ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மே 7ம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர் குழுவினர், பக்தர்களும் செய்து வருகின்றனர்.