காளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 12:04
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி கோவில் சிறப்பு மிக்க வாயு தலமாக விளங்குகிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வழக்கமாக வாரத்தில் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் சிவனுக்கு உகந்த தினமான திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்களில் கூடுதலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேவஸ்தானத்திற்கு சேவைகள், தரிசனங்கள், பிரசாதங்கள், தங்குமிட வசதிகளிலிருந்து மட்டுமின்றி நன்கொடைகள் மூலம் கோவிலுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,02,62,356 கிடைத்துள்ளது. நேற்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.