பஞ்சமுகி டோலி கேதார்நாத் புறப்பட்டது; வரும் மே 2ல் கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 03:04
உத்தரகண்ட்; பஞ்சமுகி டோலி ஸ்ரீ கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டது. கேதார்நாத் கோவில் மே 2ம் தேதி திறக்கப்படுகிறது.
உத்தரகண்டில் மிக முக்கிய யாத்திரையான சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30ம் தேதி அக்ஷய திருதியை நாளில் தொடங்க உள்ளது. சுமூகமான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்வதற்காக உத்தரகண்ட் அரசு விரிவான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. பாரம்பரிய முறைப்படி பாபா கேதார்நாத்தின் பஞ்சமுகி டோலி (5 முகம் கொண்ட கடவுளின் பல்லக்கு) இன்று ஸ்ரீ கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டுள்ளது. "பாபா கேதார்நாத்தின் பஞ்சமுகி டோலி (பல்லக்கு) உகிமத்தில் உள்ள குளிர்கால இருக்கையிலிருந்து கேதார்நாத் தாம் நோக்கி புறப்பட்டது. இது நமது நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் சனாதன கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும். பாபா கேதார்நாத் கோவில் மே 2ம் தேதி அன்று பக்தர்களுக்காக திறக்கப்படும். மே 2ம் தேதி கோவில் திறக்கப்பட்டதும், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.