காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷே திருப்பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2025 03:04
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களின் ஒருவரான அம்மையார் இவருக்கு தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் குறித்து மாங்கனித் திருவிழா மிக விமர்சையாக ஆண்டுதோறும் நடைபெறும். இதனால் பக்தர்கள் தங்கள் வீடுகளை மாங்கனிகளை இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீகைலாசநாதர் ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சோமநாயகி உடனாகிய சோமநாதசுவாமி மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில். பூர்ணபுஷ்கலா ஐயனார் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி காலை 7மணி முதல் 8.30மணி வரை வெகு விமர்சியாக நடைபெறுகிறது.
இது குறித்து நேற்று கோவில் தனி அதிகாரி காளிதாசன் மற்றும் திருப்பணிக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.கணபதி ஆகிய கூறுகையில். காரைக்காலில் சோமநாதர் சுவாமி மற்றும் அம்மையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 4ம் தேதி நடைபெறுகிறது. கோவிலில் பழமை மாறாமல் கருங்கற்கள் மற்றும் வண்ண கற்கள். வண்ண விளக்குகள். புதிய வண்ணங்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள். அன்னதானம். பக்தர்கள் கோவிலுக்கு வந்து வெளியில் செல்லும் சிறப்பு வழிகள். பக்தர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கினர். மேலும் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேலும் வரும் 1ம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கும் முதற்காலயாக சாலை வரும் 4ம் தேதி ஆறாம் கால யாகசாலை முடிவு அடைந்து பின்னர் அனைத்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்று கூறினார். இதில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம். சிவலிங்க ராஜா. காசிநாதன். பிரகாஷ்.ரவி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.