கம்பம் சித்திரை திருவிழாவில் மஞ்சள் நீராட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2025 11:05
கம்பம்; கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் நேற்று முன்தினம் இரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிக்கு பின் நேற்று மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கோயிலிற்கு முன்பாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சூழ்ந்து நிற்க, பாதுகாப்பிற்கென தீயணைப்பு வீரர்கள் கவச உடை அணிந்து தயார்நிலையில் நிற்கவும், வாசகம் என்பவர் பூக்குழி இறங்கினார். சுற்றி நின்ற பெண்கள் குலவையிட்டனர். பின் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனைத்து வேளாளர் சங்கங்களின் சார்பில் மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. கோயிலில் இருந்து கிளம்பி வ.உ.சி. திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு வழியாக மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது.