அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த நெருப்பெரிச்சலில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் 23 ம் ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த மாதம் ஏப் 29 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று ஒன்றாம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் மாவிளக்கு பூஜை அதனை தொடர்ந்து பொங்கல் பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து, பொங்கல் வைத்து, அம்மனை தரிசித்தனர். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 9:00 மணிக்கு மஞ்சள் நீர், பொங்கல் பூஜை, மறு பூஜை, தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.