பதிவு செய்த நாள்
02
மே
2025
01:05
குன்னூர்; குன்னூர் மவுன்ட் பிளசன்ட் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அஜித்நாத் சுவாமி மற்றும் ஸ்ரீ சாந்தி குருதேவ் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மவுண்ட் பிளசன்ட் சாந்தி விஜய் பள்ளி அருகே புதிதாக, அஜித்நாத் சுவாமி மற்றும் ஸ்ரீசாந்தி குருதேவ் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் நாளை (3ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, நேற்று துவங்கிய பிரம்மாண்ட பிரதிஷ்டா மகோற்சவ விழாவில், குன்னூர் டென்ட் ஹில் ஜெயின் கோவிலில் இருந்து, ஜெயின் மக்களின் ஊர்வலம், ஜெயின் குரு தேவேந்திர சாகர் ஷுரிஷ்வர்ஜி தலைமையில் நடந்தது. இவரிடம் ஜெயின் மக்கள் ஆசி பெற்றனர். குதிரைகள், பைக்குகள், தேர்களில் சிறப்பு விருந்தினர்கள் பவனி வந்தனர். ஜெயின் மக்களின், சகோதரிகளை, வரவேற்று கவுரவப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரு நாட்களில் 3 நேரமும் அன்னதானம் நடந்து வருகிறது. விழா குழுவினர் கூறுகையில், " குன்னூரில், 1942ம் ஆண்டு, 7 குழந்தைகளுடன், சாந்தி விஜய் பள்ளி, ஸ்ரீராய் பதூர் பால்சந்த் என்பவரால் துவங்கப்பட்டது. இங்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி குருதேவ் சிலையை, குருவே பரிசாக வழங்கினார். தற்போது இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகோற்சவ விழா நடக்கிறது," என்றனர்.