சித்திரை தேர் திருவிழாவிற்கு திருமுருகன்பூண்டி திருமுருகநாதரை வரவேற்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 11:05
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திருமுருகன் பூண்டி திருமுருகநாதரை, ஸ்ரீ விநாயகப் பெருமான், சந்திரசேகரருடன் ஆனந்தவல்லி தாயார் எதிர்கொண்டு அழைத்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு திருமுருகன் பூண்டி திருமுருகநாதரை எதிர்கொண்டு அழைக்கும் திருவிழா அவிநாசி கோவை மெயின் ரோடு கிழக்கு வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அரசமரத்து விநாயகர், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு ஸ்ரீ விநாயகப் பெருமான், சந்திரசேகருடன் ஆனந்தவல்லி தாயார் எதிர்கொண்டு திருமுருகநாதரை தேர் திருவிழாவிற்கு அழைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காசி விஸ்வநாத கவுண்டர் அண்ட் சன்ஸ் நடராஜன் செய்திருந்தார்.