பிரதமரின் வெளிநாட்டு பயணம் இன்று கை கொடுக்கிறது; ஆன்மீக சொற்பொழிவில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 11:05
பந்தலூர்; பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று, நட்புறவை ஏற்படுத்தியதால் இன்று அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு கை கொடுக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசுகையில், நாம் அனைவரும் இந்தியாவை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். மதங்களால் பிரித்தாலும் சூழ்ச்சியை கலைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாகிஸ்தானியர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், அவர்கள் சார்ந்த மதம் பற்றுதல் கொண்டு உள்ளனர். காஷ்மீரில் சுற்றுலா பயன்களை சுட்டுக் கொன்றவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். நம்மை காப்பாற்ற நாம் சுதந்திரமாக செயல்பட, இரவு பகல் பாராமல், கடும் குளிரிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு தரும் பணி மேற்கொள்ளும் ராணுவ பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிரதமர் மோடி வெளிநாடுகள் செல்லும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் பிரதமரின் நட்புணர்வால், இன்று இந்தியாவில் ஆதரவாக அனைத்து நாடுகளும் களம் இறங்கியுள்ளது. ஆகவே இந்தியாவை ஆளும் பிரதமர் மிகச்சிறந்த ஆளுமை சக்தி கொண்டவர். எனவே மக்கள் இந்தியா மீதும், ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மீதும் நம்பிக்கை மற்றும் பற்றுதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ராணுவத்தினரின் பணியின் மகத்துவத்தை இளைய தலைமுறையிருக்கு பெற்றோர்கள் உணர்த்த வேண்டும் என்றார்.