காரைக்கால் அம்மையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2025 10:05
காரைக்கால்; காரைக்காலில் அம்மையார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவில் பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உலக பிரசித்தி பெற்ற அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களின் ஒருவரான அம்மையாருக்கு தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் குறித்து மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும். இதனால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் மாங்கனிகளை இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீகைலாசநாதர் ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சோமநாயகி உடனாகிய சோமநாதசுவாமி மற்றும் காரைக்கால் அம்மையார் கோவில். பூர்ணபுஷ்கலா ஐயனார் உள்ளிட்ட மூன்று ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று ஆறாம் காலம் யாக சாலை முடிவடைந்து பின்னர் யாகசாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்களுடன் வான வேடிக்கையுடன் காலை 8.10மணிக்கு சோமநாத சுவாமி. சோமநாயகி அம்மன். அம்மையார் மற்றும் ராஜகோபுரம்.ஐய்யனார். திருக்குளத்து நந்தி உள்ளிட்ட விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம். குடிமைப் பொருள் வழங்கும் துறை அமைச்சர் திருமுருகன். எம்.எல். ஏக்கள் நாஜிம்.சிவா. சந்திரபிரியங்கா. நாகதியாகராஜன். சீனியர் எஸ்.பி. லக்ஷ்மி சௌஜன்யா. உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாரதியார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மட்டும் வீடுகளில் இருந்து ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.