ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2025 11:05
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று காலை மூலவர் பெருமாள், அம்புஜவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனை நடந்தது. பின், கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் சித்திரை முக்கிய நிகழ்வாக நாளை இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி காலை தேர் திருவிழா, 12ம் தேதி மதியம் மட்டையடி உற்சவம், இரவு நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. 13ம் தேதி இரவு கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் மாலா, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.