நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் சாந்த காளியம்மன் கோவிலில் மிளகாய் அபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் சாந்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 3ம் தேதி அம்மனுக்கு வளையலணி விழா, சந்தனகாப்ப அலங்காரம் நடந்தது. 4ம் தேதி பால்குடம் ஊர்வலம் நடந்தது. மாலை கோவில் நிர்வாகி பாவனா தலையில் அரைத்த மிளகாய் கரைசலை ஊற்றி மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது. நாளை 6ம் தேதி தீச்சட்டி ஊர்வலம், சாகை வார்த்தல் அம்மன் வீதி உலா நடக்கிறது.