புவனகிரி; புவனகிரியில் ஆரிய வைசிய மகா சபை சார்பில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தி விழா நடந்தது. இதனையொட்டி இன்று காலை 6:00 மணிக்கு பஜனை மடம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்களை ஆரிய வைசிய மடத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனை, விசேஷ சோடஷ கௌரி பூஜைகள், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஆரிய மகா சபை தலைவர் சுந்தரேசன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.