பதிவு செய்த நாள்
08
மே
2025
06:05
வால்பாறை; வால்பாறையில், சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை ராஜிவ்காந்தி நகர் சந்தனமாரியம்மன் கோவிலின், 17ம் ஆண்டு திருவிழா இன்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவில், நாள் தோறும் காலை, மாலை, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. 10ம்தேதி இரவு, 7:30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்ததை பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். வரும், 12ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம், 12:00 மணிக்கு அன்னதான விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.