மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2025 03:05
மேட்டுப்பாளையம் ; குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலனி ரங்கராஜன் லேஅவுட் பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜ அஷ்ட விமோக்ஷண மஹா கணபதி திருக்கோவிலில் மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வைபவம் நடந்தது. இதில் விஸ்வக்ஷேனர், லட்சுமி நாராயண பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கலச ஆவாஹனம் பஞ்ச சுத்த ஹோமம் நவக்கிரக ஓமம் மகா கணபதி ஹோமம் நட்சத்திர ஹோமம், 12 ராசிக்கான ஹோமம் தக்ஷிணாமூர்த்திக்கு 108 தடவை எங்களால் ஹோமம் அதனைத் தொடர்ந்து நவகிரகம் மற்றும் மேதா தட்சிணாமூர்த்தி சன்னதி மூலவருக்கு தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் வாசனை திரவியங்கள் சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா கலச அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மங்கள ஆரத்தி அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழுவினர் மேற்கொண்டிருந்தனர். பூஜை வைபவத்தை லட்சுமி நாராயண அர்ச்சகர் மேற்கொண்டார்.