சித்ரா பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 11:05
கோவை; மதுக்கரை, மரப்பாலம் மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
கோவை; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து ஏராளமான பக்தர்கள் இறைவனை வழிபாடு செய்கிறார்கள். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். காலை முதலே பக்தர்கள் தர்மலிங்கேஸ்வரரை காண குவிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், வழங்கப்பட்டது.