திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தேர்க்கால பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2025 12:05
காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தேர்க்கால பூஜை நடந்தது. காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடப்பது வழக்கம். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேர்க்கால பூஜை நடந்தது. முன்னதாக சிவாச்சார்யார் 5 தேர்கள் மற்றும் கொடி மரத்திற்கு பல வகை திரவங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் புனித நீர் அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் சோமசேகர் அப்பாராவ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழா முக்கிய நிகழ்வான கொடியேற்றம் வரும் 23ம் தேதி நடக்கிறது. வரும் 31ம் தேதி உன்மத்த நடனம், வரும் ஜூன் 6ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.