வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2025 11:05
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. இக்கோயிலில் மே 1ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நிறைவு நாளான நேற்று பூக்குழி திருவிழா நடந்தது அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் தீ வளர்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். பின்னர் காப்பு கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மாலை 4:30 மணிக்கு அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டினர் செய்திருந்தனர்.