திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2025 11:05
கடலுார்; திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி தேர்த் திருவிழா நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், சுவாமி புறப்பாடு செய்து தேரில் எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் செய்தனர்.