பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
விசாகம் 4 ம் பாதம்
சாணக்கியத்தனமும் சாதுரியமும் கொண்டு செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமான மாதம். ராசியாதிபதி பாக்ய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்துள்ள நிலையில், நட்சத்திராதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் சிக்கல் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இதுவரை இருந்த நன்மையான நிலையில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வையால் ராகு சனியால் ஏற்படும் பாதகமான பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவில் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வரவு அதிகரிக்கும். செலவு ஏற்பட்டாலும் அது அத்யாவசியமானதாக இருக்கும். ஜீவானாதிபதி சூரியன் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். விவசாயிகள் வேளாண்மையில் அக்கறை எடுப்பது நல்லது. உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரோக்யம் மேம்படும். உழைப்பாளர்கள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: மே 28.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30. ஜூன் 3, 9, 12.
பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
அனுஷம்
எடுத்த வேலையில் உறுதியாக இருந்து அதை முடித்திடும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவர், உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவர் குரு பகவானின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால் அவை உங்களை நெருங்காமல் போகும். மே 31 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு காதல் உண்டாகும். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை இல்லாமல் போகும். பொன் பொருள் சேரும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். எதிர்பாலினரால் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை, சங்கடம் முடிவிற்கு வரும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலை நடக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் நிர்வாகத்தை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நல்லது. பணி புரியும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மே 29.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.
பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
கேட்டை
நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் விருப்பம் நிறைவேறும் மாதம். ஜூன் 2 முதல் புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நீண்ட நாள் கனவு நனவாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். மே 31 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிக்கேற்ற லாபத்தை தருவார். தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டவருக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை உங்களைப் பாதுகாக்கும். 4 ம் இட சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். ஆரோக்யமாக செயல்படுவீர். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வீட்டில் புதிய பொருள் சேரும். நேற்றைய கனவு நனவாகும். பிள்ளைகள் எதிர்காலத்தை மனதில் வைத்து சேமிப்பை உருவாக்குவீர். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் நிதானம் காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: மே 30.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.
பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.