பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
சித்திரை 3, 4 ம் பாதம்
எதையும் தானே உருவாக்கிக்கொள்ளும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். தைரிய, வீரிய காரகன் செவ்வாய் ஜூன் 8 வரை ஜீவன ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிப்பது உங்களுக்கு யோகமாகும். தொழில், வியாபாரத்தில் அவரால் ஏற்படக்கூடிய பாதிப்பு நீங்கும். வழக்கமான வேலை நடக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜூன் 8 முதல் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளால் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இளைஞர்களுக்கு காதல் உண்டாகும். அது திருமணம் வரையில் செல்லும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னச் சின்ன நெருக்கடி வரும். மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும். இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் தடைகளும் வருமானக் குறைவும் ஏற்படும் ஒரு சிலர் அரசுக்கு அபராதம் கட்டவும் நேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தவர்களும் ஆரோக்யம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மே 26.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.
பரிகாரம்: அபிராமியை வழிபட சங்கடம் விலகும்.
சுவாதி
உழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ராகு, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. குரு பகவானின் பார்வை கிடைப்பதால் எந்த விதமான பாதக பலன்களும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சொத்து விஷயத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நினைத்த வேலை நடக்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் கனவுகளை நனவாக்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலம் கூடும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. அரசாங்க விவகாரத்தில் சில சங்கடம் ஏற்படும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது. இல்லையெனில் வீண் சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் ஜூன் 8 முதல் செவ்வாயும் இணைவதால் வருமானம் உயரும். கடன் தொல்லை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உழைப்பாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு லாபநிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மே 27.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31. ஜூன் 4, 6, 13.
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட நல்லது நடக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்
அறிவாற்றலால் எதையும் சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் மிக யோகமான மாதம். குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் உங்களை விட்டு விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வருமானத்தை அதிகரிப்பார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மே 16 முதல் ஜூன் 2 வரை புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர். பொருளாதார நிலை உயரும். உறவுகளில் லாபம் கூடும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி ராகுவிற்கு, குருவின் பார்வை உண்டாவதால் அவர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி பெற்று செல்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.
சந்திராஷ்டமம் மே 28.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை நடக்கும்.