எழுமலை; எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் ஆலய சித்திரைத் திருவிழாவில் திருவேங்கடப் பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், திருவேங்கடபெருமாள் பூத வாகனத்திலும் புறப்பாடாகி, எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர். மண்டகப்படியில் தங்கி நேற்று இரவு முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு நகர்வலமாக வந்து, அங்கு எதிர்சேவை நடந்தது. சைவமும், வைணவமும் இணைந்து நடந்த இந்த எதிர்சேவை வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.