திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2025 05:05
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு கருடசேவை நடைபெறும். அதன்படி சித்ரா பவுர்ணமியான நேற்று இரவு 7 மணி முதல் 9 மணிவரை கருடசேவை நடைபெற்றது. தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்த சுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்.