Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்மநாயக்கன்பாளையம் செல்வ ... குன்னத்தூர் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : பக்தர்கள் இறங்கினர் குன்னத்தூர் பொங்காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் பெருமாள் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் பெருமாள் உலா

பதிவு செய்த நாள்

15 மே
2025
02:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் காலை உத்சவத்தில், தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான, கடந்த 12ம் தேதி, காலை ஹம்ஸ வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும் உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 13ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், மாலை அனுமந்த வாகன உத்சவமும் நடந்தது.


நான்காம் நாள் உத்சவமான நேற்று காலை, சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலத்திலும், இரவு சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான இன்று காலை தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆறாம் நாள் உத்சவமான நாளை காலை, தங்க சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் வரதராஜ பெருமாள் உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் 17ம்தேதி காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார்.பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar