Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹோட்டலில் பரிமாறப்பட்ட புரி ... திண்டிவனம் கரிவரதராசபெருமாள் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா திண்டிவனம் கரிவரதராசபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் லட்சுமி திருக்குளம் சீரமைப்பு; இறுதி கட்ட பணிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் லட்சுமி திருக்குளம் சீரமைப்பு; இறுதி கட்ட பணிகள்

பதிவு செய்த நாள்

19 மே
2025
11:05

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த குளம் (திருக்குளம்) ரூ. 6.50 கோடியில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தின் உள்பகுதியில் 4 மூலைகளிலும் இருந்த கருங்கல் சுவர்கள் இடிந்து விழுந்தது. அக்குளம் பழமை மாறாமல், ஏற்கனவே இருந்த கருங்கற்கள் கொண்டு சீரமைப்பு பணிகள் நடக்கிறது. வடக்கு பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சுவர் அமைத்து அதன் உள்பகுதியில் கருங்கல்கள் ஒட்டும் பணி நிறைவடைந்தது.‌ அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா ஆலோசனையின் படி, புதிதாக திருக்குளத்தின் உட்பகுதியை சுற்றிலும் நான்கு அடி உயரத்திற்கு சிமென்ட் தூண்களும் அதன்மேல் பகுதியில் சுதை வேலைகளும், இடைப்பட்ட பகுதிகளில் இரும்பு கேட்டுகளும் அமைக்கப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. குளத்தின் மேற்குப் பகுதியில் முன்பு இருந்த மரங்களின் வேர்களால் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மீண்டும் மரங்கள் வளர்ந்து குளத்திற்கு மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் குளத்தைச் சுற்றிலும் மேல்பகுதியில் நான்கு மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. திருக்குளம் என்ற பெயருக்கு ஏற்றார் போல் குளத்தை அழகுப்படுத்தும் இறுதிகட்ட பணிகள் நடைக்கிறது. கும்பாபிஷேகத்திற்குள் பணிகளைமுடிக்க விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar