விழுப்புரம்; விழுப்புரம் வேத சம்ரக்ஷனா டிரஸ்ட் சார்பில் சமஷ்டி உபநயனம் நடந்தது. விழுப்புரம் சங்கரமடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பிராமண மாணவர்களுக்கு உபநயனம் என்கிற பூணுால் அணிவிக்கப்பட்டது. இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும், திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் வேத மந்திரங்கள் முழங்க பூணுால் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, 17ம் தேதி இரவு மாணவர்களுக்கு உதக சாந்தி என்கிற நன்னீராட்டு விழா நடந்தது. பூணுால் அணிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடை, அவர்களின் தாய், தந்தைக்கு வேஷ்டி புடவை, தங்கம் மற்றும் வெள்ளிப் பூணுால், பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சங்கர மட மேலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் அத்யாபக் சங்கரநாராயணனும், சுந்தரராம சாஸ்திரிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் செய்தனர்.