அயோத்தி ஹனுமான் கர்ஹி கோவிலில் பட மங்கல் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 01:05
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோவிலில் ஜ்யேஷ்ட மாதத்தின் இரண்டாவது பட மங்கல் (பெரிய செவ்வாய்) வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அயோத்தியில் உள்ள ஒரு அழகான கோயில் ஹனுமான் கர்ஹி. ராமரின் பிரியமான பக்தரான ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது. ஒரு கோட்டையைப் போல கட்டப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று பெரிய செவ்வாய் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. செவ்வாய் கிழமை ஹனுமனை வழிபடுவதற்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. உத்தரபிரதேசம், அயோத்தியில் உள்ள ஹனுமான் கர்ஹி கோவில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இன்று ஜ்யேஷ்ட மாதத்தின் இரண்டாவது பட மங்கல் (பெரிய செவ்வாய்) வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஹனுமான் சாலிசா பாடி நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.