அக்னி நட்சத்திரம் நிறைவு; பழநியில் கிரிவலம் சுற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 10:05
பழநி; பழநியில் அக்கினி நட்சத்திர விழா சித்திரை கழுவு இன்று நிறைவடைகிறது.
பழநியில் கிரிவலத்திற்கு பெயர் பெற்ற அக்கினி நட்சத்திர, சித்திரைக் கழுவு விழா மே 8, கோவிலில் கருவறையில் சீதகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று துவங்கியது. சித்திரை மாதத்தின் பின் நாட்களும், வைகாசி மாசத்தின் முன் ஏழு நாட்களும் சித்திரைக் கழுவு என அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பழநி கோயில் மலையை பக்தர்கள் கடம்ப மலருடன் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றது. இச்சமயத்தில் கடம்ப மரத்திலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று பக்தர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று மே.21.,ல் அக்னி நட்சத்திர விழா நிறைவடையும் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. வெளியூரிலிருந்து ரேக்ளா வண்டிகள் மூலம் கிரிவலம் சுற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.