போத்தனூர் பேச்சியம்மன் கோவில் திருவிழா; சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 11:05
கோவை; போத்தனூர் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அன்னை பேச்சியம்மன் கோவில் மாரியம்மன் திருவிழா 20ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கோவில் வளாகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து பூச்சாட்டு நிகழ்வும், கோவில் வளாகம் முன்பு அக்னி கம்பம் நடுதல் விழாவும் நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் நாள் சக்தி கரகம் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்கள் தலையில் மஞ்சள் நீர் மற்றும் சக்தி கரகத்தை சுமந்தபடி போத்தனூர் நகர வீதிகளில் வலம் வந்தனர். இதில் மூலவர் பேச்சி அம்மன் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.