வில்லிவாக்கம்; வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பெருவிழா, கடந்த 17ம் தேதி, செல்வ பல்லக்கு உத்சவத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உத்சவமான இன்று காலை, 7:00 மணிக்கு கருடசேவை உற்சவம் நடந்தது. கருட வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சவுமிய தாமோதர பெருமாள், முக்கிய மாட வீதிகள் வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும், பக்தர்கள் கற்பூர ஆர்த்தி எடுத்து வழிபட்டனர். தொடர்ந்து சூரிய பிரபையில் உலா வந்தார். நாளை காலை கேடயம் உற்சவம், மாலை, சேஷவாகன உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 28 தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது.