Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொள்ளாபுரியம்மன் ஜாத்திரை ... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் சங்கர பாரதி சுவாமிகள் தரிசனம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி சதய விழா; திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகாசி சதய விழா; திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

22 மே
2025
10:05

மயிலாடுதுறை; திருவிடைக்கழி அருள்மிகு தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 

மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட, திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருக பெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா  பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருநாளான இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் பிரகாரம் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.  பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து காப்பு கட்டி  ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.  தொடர்ந்து பூரணாஹூதி செய்யப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar