பதிவு செய்த நாள்
23
மே
2025
12:05
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உப கோவிலான ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா காலை 6.14 மணிக்கு கோபுர விமானத்திற்கு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவக்குமார் குருக்கள் கலச நீர் ஊற்ற விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 21ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முதல் கால யாக பூஜையில்,கணபதி யாகம், தன ஹோமம், கலாகர்ஷணம் ஆகியவை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜைகளில் நாடி சந்தனம், பேரொளி வழிபாடு ஆகியவற்றுடன் கலச புறப்பாடு நடைபெற்று கோபுர விமானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ காசி விநாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தச தரிசனம், தசதானம், மஹாதீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாட்டினை,கோவில் தக்கார் சபரீஷ் குமார்,அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். அவிநாசி கிழக்கு ரத வீதி நகராட்சி வணிக வளாக கடைக்காரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.