பதிவு செய்த நாள்
24
மே
2025
11:05
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 16ம் தேதி கொடி ஏற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, அங்காளம்மன் மற்றும் அம்மன் சுவாமிகள் பிறப்பு, விளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், கன்னிமார் பூவெடுத்தல், சாகைவார்த்தல், காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம், ஊரணி பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கழு மரம் ஏறுதல், காளிக்கோட்டை இடித்தல் நிகழ்ச்சிக்கு பிறகு தேர்திருவிழா துவங்கியது. முன்னதாக, மூலவர் மற்றும் உற்சவர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் ஊரில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.