வடுகபாளையம் ராஜகணபதி கோவில் ஆண்டு விழா; சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 10:05
பல்லடம்; பல்லடம் அருகே, வடுகபாளையம் ராஜகணபதி கோவில் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. பல்லடம் அடுத்த, வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில், ஸ்ரீராஜகணபதி கோவில் உள்ளது. கோவில் இரண்டாம் ஆண்டு விழா, மே 28 அன்று மாலை 5.00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இரவு, 8.00 மணிக்கு வள்ளி கும்மி வட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.