மகா சக்தி மாரியம்மன் கோவில் உற்சவ விழா; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 11:05
கோவை; ஆர். எஸ். புரம் -பொன்னைய ராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்பன் சுவாமி -ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 24-ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 20ம் தேதி கணபதி ஹோமத்துடன் நடந்தது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பூ கம்பம் நடுதல், சக்தி கரகம், பூவோடு மாவிளக்கு ஊர்வலம் ஆகியன நடைபெற்றது. இதன் நிறைவு நாளான இன்று வெள்ளிக்கிழமை மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்வ அலங்காரத்தில் மகா சக்தி மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.