பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
மதுரை: நெல்லையில் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 20வது மாநாடு, டிச., 28 முதல் 3 நாட்கள் நடக்க உள்ளது. ராமகிருஷ்ண தபோவனம் சார்பில், ராமகிருஷ்ணர், சாரதாதேவியார், விவேகானந்தர் பக்தர்களின் இம்மாநாடு, வி.எம்.சத்திரம் சாரதா கல்லூரி வளாகத்தில் நடைபெறும். முதல்நாள் (டிச.,28) காலை 9.15 மணிக்கு, ராமகிருஷ்ணர் விழாவை சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானாந்த மகராஜ் திருவிளக்கேற்றி துவக்கி வைப்பார். இதில், ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்ரமணியராஜா, அருப்புக்கோட்டை ராமலிங்கா மில்ஸ் சேர்மன் டி.ஆர்.தினகரன், கோவை பண்ணாரி அம்மன் குழும சேர்மன் எஸ்.வி.பாலசுப்ரமணியம் பங்கேற்க உள்ளனர். மாலையில் சுவாமி ராமகிருஷ்ணர் குறித்த கருத்தரங்கம் நடைபெறும். 2ம் நாளில் பஜனை, அன்னை சாரதா தேவியார் கருத்தரங்கம் நடைபெறும். 3ம் நாளில் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்தரங்கம் நடைபெறும். இவற்றில் திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சதானந்தமகராஜ், செயலாளர் திவ்யானந்த மகராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள ராமகிருஷ்ண மடம் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.